இன்றைய (27) மற்றும் நாளைய (28) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு
இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சை நடைபெறாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி. இந்துக்கா லியனகே அறிவித்துள்ளார்.
விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள், நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையுடன் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை நடைபெறும் எதிர்காலத் தினங்கள் குறித்து பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.






